Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் நல்லாவா இருக்கு…. திட்டினால் அழகு தமிழில் திட்டுங்க…. அதிருப்தியில் தமிழிசை சௌந்தரராஜன்….!!!

தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைத்தளங்களில் ஒருவர் ஒருமையில் பேசியதாக வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை தமிழ் பல்கலைக்கழகம், சென்னை வானவியல் பண்பாட்டு மையம், அயல்நாட்டு கல்வித்துறை இலங்கை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நடத்தினர். இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில். “குழந்தைகளுக்கு அழகாக தமிழில் பெயர் வையுங்கள். அவர்களின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். பாரதியார் பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர். மேலும் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் வேண்டும் என்று தெரிவித்த அவருக்கு பெண்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

இதனை தொடர்ந்து இணையதளங்களில் தமிழ் மொழியை  பயன்படுத்துவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. அதன் மூலம்  தான் நாம் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் அனைவரும் தமிழை ஒழுங்கான முறையில் பயன்படுத்துங்கள். இதற்கிடையில் என்னை அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் இணையதளத்தில்  “இரு மாநிலங்களுக்கு இவள் கவர்னரா” என்று ஒருமையில் பயன்படுத்தி கூறியிருந்தார். திட்டினாலும் தமிழில் திட்டுங்கள், தமிழை மரியாதையுடன் உச்சரியுங்கள். தமிழை வணங்குவோம். கருத்து என்பது தமிழரின் பங்கு. ஆனால் அதனை மரியாதையான வார்த்தைகளுடன் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |