Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. “இதை மட்டும் செய்யாதீங்க”…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயத்திற்காக துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு காலத்தே விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழகம் முதல்வர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை தென்மேற்கு பருவகாலத்தில் தமிழகத்தில் இயல்பான மழை அளவு 328.4 மி.மீட்டருக்கு பதிலாக 45% கூடுதலாக மழை பெய்துள்ளது. மேலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய ஆதாரமான மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் நீண்ட நாட்களாக அதன் முழு கொள்ளளவிற்கு நீர் இருப்பு உள்ளது. இதர நீர் தேக்கங்களிலும் நீர் திருப்திகரமாக இருப்பு உள்ளது. மாநிலத்தில் அனைத்து பகுதிகளும் பரவலாக மழை பெய்தது உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் நிலவு சாதகமான சூழலை கருத்தில் கொண்டு பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் முன்னரே கணித்து போதுமான அளவுக்கு ரசாயன உரங்களை தமிழகத்திள்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் உர துறையினை வலியுறுத்தினர். அதனைப்போலநவம்பர் மாதத்தில், 1,46,720 மெட்ரிக் டன் யூரியா, 32,260 மெட்ரிக் டன் டிஏபி, 29,000 மெட்ரிக் டன் பொட்டாஷ், 78,350 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசின் உரத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. அதனைப்போல தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 94,377 மெட்ரிக் டன் யூரியா, 48,060 மெட்ரிக் டன் டிஏபி, 35,255 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,71,156 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளது. இதனையடுத்து வரும் நாட்களில் புயல் மழை அதிகமாக இருக்கும் என்பதால் உர வினியோகம் பாதிக்காதவாறு இறக்குமதி செய்யப்படும் உரங்களை தூத்துக்குடி, மங்களூர் துறைமுகங்கள் மூலம் தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உரம் குறித்த புகார் உதவி மையம் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் உர வினியோகம் சீராக இருக்க வேண்டும் என்று தமிழகம் முதல்வர் அறிவிப்பு உள்ளார். அதன்படி சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டு வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கி வருகிறது. உரம் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் விவசாயிகள் 9363440360 என்ற எண்ணை whatsapp மூலமாக அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம். எனவே தமிழக விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் கிடைப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி விட்டதாலும் வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் உள்ளதாலும் பயிரின் தேவைக்கும் அதிகமான விவசாயிகள் உரமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக உர என்றால் செலவு அதிகமாகும். அது மட்டுமில்லாமல் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் குறையலாம் என்பதால் மண் ஆய்வின் அடிப்படையிலோ அல்லது துறை அலுவலர்களின் பரிந்துரைப்படி உரமிட்டு விவசாயிகள் அதிகமாக மகசூல் பெற வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |