Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பலி எண்ணிக்கை…!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்தது.

சென்னையில் கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,444  ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 13 வது நாளாக நேற்றும் கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. தமிழகத்தில் நேற்று மற்றும் 127 பேர் கொரோனாவிற்கு பலியாகினர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1641 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 54, 213 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 5, 236 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இதுவரை 2,72, 251 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 422 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 376 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 339 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 290 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 260 பேருக்கும், தேனி மாவட்டத்தில் 213 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |