தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலைஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்து 24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார். தென் தமிழகம் உள்மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.
நாளை நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று புவியரசன் கூறினார். தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் அரபிக்கடலில் லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் கேரளத்தின் கரையோரப் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறை காற்று வீசுவதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மைய இயக்குனர் புவியரசன் கேட்டுக்கொண்டார்.