Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு ….!!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல ஊர்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் திருவான்மியூர், அடையாறு, திருவல்லிக்கேணி, கிண்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை புறநகரில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டியது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், சுற்றுவட்டாரத்தில் மழையினால் ஆறுகள் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. தர்மபுரி சுற்று வட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது.

இதேபோல் பாலக்காட்டில் இடி மின்னலுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், விழுப்புரம் ,வேலூர் ,தஞ்சை, மதுரை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |