இந்த சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது தவறான குற்றச்சாட்டு. எந்த கோவிலில் அவ்வாறு நடந்தது என்று ஆதாரத்துடன் கேள்வி கேளுங்கள் என்று கூறினார். அதனை தொடர்ந்து விஐபி தரிசனம் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.
அதற்கு உதாரணமாக ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.20 கட்டணத்தில் தரிசனம் இருந்தது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் அரசுக்கு வருமானம் கிடைத்தது. இருப்பினும் அந்த கட்டண முறையை நாங்கள் ரத்து செய்துள்ளோம். அதனைப் போல நாளடைவில் எங்கெல்லாம் சாத்திய கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் படிப்படியாக தடுக்க இந்து சமய அறநிலை துறை முயற்சி செய்து வருகிறது. இதனையடுத்து திருக்கோயிலில் அனைவரும் சமம். சில இடங்களில் கோவிலில் தங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதை இந்த ஆட்சியில் கொழித்து உள்ளோம். கோயில்களில் யார் வேண்டுமானாலும் தாங்கலாம். தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். மேலும் கோயில்களில் அனைவரும் சமம் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.