தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்க இந்திய விஞ்ஞானி புகழ்பெற்ற தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
அமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளுக்கு புகழ் பெற்ற அமைப்பாக விளங்குவது தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆகும். இதன் இயக்குனராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அதிபரால் தேர்ந்தெடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சேதுராமனை இயக்குனராக நியமிக்க அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
கோர்டோவாவின் 6 வருட பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் புகழ்பெற்ற தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராக ஜூலை மாதம் 6ஆம் தேதி சேதுராமன் பதவியேற்கவுள்ளார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து தலைநகரான சென்னையில் இருக்கும் விவேகானந்தா கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, முதுகலை பட்டத்தை சென்னை ஐஐடியில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.