லண்டனில் பிரபல தமிழ் வர்த்தகரின் வாகனம் சமீபத்தில் திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
லண்டனில் லூசியம் என்ற பகுதியை சேர்ந்த அந்த வர்த்தகர் தன் வாகனத்தை விற்பனை செய்ய தீர்மானித்து, ஒரு இணையத்தளத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். அந்த விளம்பரத்தை பார்த்த மூன்று நபர்கள் வாகனத்தை வாங்கிக்கொள்கிறோம் என்று கூறி அந்த வர்த்தகரை அணுகியுள்ளனர்.
அதன்பின்பு, அந்த வாகனத்தை பார்க்க, மூவரும் வர்த்தகரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அதனையடுத்து, வாகனத்தை பார்வையிட்ட அவர்கள், யாரும் பார்க்காத சமயத்தில் சாவியை எடுத்துவிட்டனர்.
அதற்கு பதிலாக அவர்கள் வைத்திருந்த வேறொரு சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை வீட்டிலிருந்த யாரும் கவனிக்கவில்லை. அதன் பின், இரவில் மீண்டும் அங்கு வந்த திருடர்கள், அவர்களிடம் இருந்த சாவியை கொண்டு வாகனத்தை திருடிச் சென்றிருக்கிறார்கள். இந்த காட்சி, சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.