தி.மு.க அரசு தன் தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது பற்றி கூறி இருந்தது. அதன்படி லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறும் அடிப்படையில் பல கோடிகளை முதலீடு செய்து அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்திருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர தி.மு.க அரசு கோடிக் கணக்கில் முதலீடு செய்துள்ளது.
உள்நாட்டில் மட்டுமின்றி அயல் நாடுகளிலும் முதலீட்டை பெருக்கி தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு சூழலை அதிகரித்திட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்ப யணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு அரசு 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் அடிப்படையில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து பல முன்னணி நிறுவனங்கள் உடன் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது..