Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.க எங்கு இருக்கு?… எத்தனை பேர் இருக்காங்க?…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்பீச்….!!!!

பெரியார் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் வழிநடத்தி வருகிறார்.

மேலும் ஒன்றரை வருடங்களில் அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரிசெய்து 85 விழுக்காடு வாக்குறுதிகளை முழுவதுமாக வழங்கி இருக்கிறார். பா.ஜ.க தமிழகத்தில் எங்கு இருக்கிறது..?, மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?. எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது..? என்பது கூட தெரியாத கட்சிதான் பாஜக. ரூ.345 மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் என பொய் சொல்ல கூடியவர்கள் பா.ஜ.க-வினர்” என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |