மாநிலங்களவையில் GST இழப்பீடு குறித்த கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி போன்றோர் பதில் அளித்தனர். சென்ற ஜூன் மாதம் நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய GST இழப்பீடு ரூபாய்.17,176 கோடி நிலுவையில் உள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் பேசியதாவது, தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்தி விட்டதால், பாக்கியுள்ள ரூபாய்.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது என கூறினார். தமிழகத்திற்கு ஜூன் 2022-ஆம் ஆண்டு நிலுவையிலுள்ள GST இழப்பீடு ரூபாய்.1,200 கோடி மட்டுமே ஆகும். மாநிலத்தின் பயன்பாட்டு சான்றிதழ் கிடைக்கப் பெறாததால் அதனை நிலுவை என கருத முடியாது என்று தெரிவித்தார்.