Categories
மாநில செய்திகள்

3 நாளுக்கு ஒருமுறை…… 2 ஆஃப் அல்லது 4 குவாட்டர்…… தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இனி ஒரு நபருக்கு  3 நாளுக்கு ஒருமுறை  மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு பிறகு இன்று முதல் பெரும்பாலான பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றன. இதுவரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா மதுக்கடைகள் திறந்தபின் தாறுமாறாக அதிகரித்து விடக்கூடாது என்பதில், தமிழக அரசும், காவல் துறையினரும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி,

பல்வேறு மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது புதிய அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஒரு நபருக்கு மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒரு full அல்லது ஒரு பீர் பாட்டில் வழங்கப்படும் என்றும், ஒரு fullஐ அந்த நபர் இரண்டு off அல்லது நான்கு குவார்ட்டர் ஆக பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மதுபானம் வாங்க வருவோர் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்றும், அந்த ஆதார் எண் ரசீதுடன் அச்சிடப்பட்டு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கொரோனா பாதிப்பு  குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |