பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளுக்கும், ஜி.பி.எஸ் கருவிகளுக்கும் அனுமதி அளித்தல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தல், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர் சம்மேளனம் மாநில தலைவர் எஸ்.எம்.ஆர் குமாரசாமி கூறியது: “வேக கட்டுப்பாட்டு கருவிகள் தயாரிக்கும் 49 நிறுவனங்களுக்கு அப்ரூவல் உள்ளது.
ஆனால் பெரும் 12 நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழகத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வாகன உரிமைகளை புதுப்பித்தலை, அனைத்து பகுதிகளிலும் செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுத்தல் மற்றும் டீசல் மீதான வாட் பெரிய குறைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்தப் போராட்டத்தில் 4.5 லட்ச கனரக வாகனங்கள்,9 லட்ச சிறிய வாகனங்கள் கலந்து கொள்கின்றனர். வரும் 29ஆம் தேதி பிறகு எந்த ஒரு லாரியும் இயங்காது.
மருந்து பொருள், பால் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் மட்டுமே இயங்கும். இதன் காரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் கோடி வரை இழப்பீடு ஏற்படும். போக்குவரத்து துறையில் அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெற்று வருகின்றன. சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனை நடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது” என்று அவர் தெரிவித்தார்.