Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள்… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் மீண்டும் திறக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு 16 ஆவது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல் உரையை தொடங்கி, சட்டப்பேரவை ஆரம்பித்து வைத்தார். தனது உரையில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும் இன்று கூறியுள்ளார். தமிழக இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

தமிழகத்தின் நிதி நிலைமையைக் குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டு வந்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களிலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாளையும், நாளை மறுநாளும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |