கல்வி கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு பாடம் பயின்று வருகின்றன. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். சென்ற முறையும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் தவணை முறையில் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கல்வி கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், இணைய வழியில் சேர்க்கை தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.