Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரும் துறைச் சார்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர்.
ஆலோசனையில் முதலமைச்சர், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை. இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும். புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கை இடம் பெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |