கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக குவைத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் இருந்து வந்த இவர் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் நெல்லை இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், திடீரென இவர் இறந்து விட பரிசோதனை முடிவுகளும் வெளிவராததால் கொரோனா பாதிக்கப்பட்டு தான் உயிரிழந்தாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.