ரூ.59.16 கோடி செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள 300 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு பதிலாக புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள்களை கட்டுவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 300 ஊராட்சி மன்ற கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, ஒரு கட்டிடத்திற்கு தலா 19 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என 300 கட்டிடங்களுக்கு 59 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் அரசாணையை வெளியிட்டுள்ளது.