Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டிஜிபி கையில் ஸ்கின் ஷாட் இருக்கு…! அமித் ஷாவுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  பத்திரிக்கை நண்பர்கள் போலீசிடம் துருவி துருவி கேள்வி கேட்குறீங்க.  எங்கிருந்து வந்தது ? வீட்டில் என்ன படிச்சிங்க ? சொல்லுங்க. யாராச்சும் கைது பண்ணீங்களா ? சொல்லுங்க.  பால்ரஸ் குண்டு ஏன் வந்துச்சு ? நெய்ல்ஸ் ஏன் வந்துச்சு ? ஏன் அவர் சம்பந்தமே இல்லாம 4.1க்கு காலையில வண்டி வெடிக்கணும். உங்ககிட்ட சிசிடிவி இருக்கு. அந்த கோட்டைமேடு பகுதியில ஆரம்பித்து, காவல்துறை சிசிடிவி ஃபுட்டேஜ் சேகரித்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஏழு,  எட்டு கிலோமீட்டர் மேல இந்த வண்டி பணயம் செய்து இருக்கின்றது. எதற்கு பயணம் செய்தது ?  எதை நோக்கி போகுது ? எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாமல், இதை இரண்டு சிலிண்டர் பிளாஸ்ட் ஆக சொல்லி இருப்பது வேடிக்கை, விசித்திரம், எல்லாவற்றையும் விட கேவலம். அதனால் தான் நேற்று காலை பாரதிய ஜனதா கட்சி நம்முடைய உள்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருக்கின்றோம்.

இந்த கடிதத்தினுடைய சில விஷயங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காக பத்திரிகையாளர் நண்பர்களுக்கு இந்த கடிதத்தை நாங்கள் ரிலீஸ் பண்ணவில்லை. குறிப்பாக எதை எல்லாம் காவல்துறை மூடி மறைக்க பாடுபடுகின்றார்கள். யாரை காப்பாற்றுவதற்காக ? எதற்காக அஞ்சு பேரை அரெஸ்ட் பண்ணி UAPA கேஸ் இன்னும் போடல. அவருடைய  whatsapp மெசேஜ் இருக்கிறத  காவல்துறை டிஜிபி இல்லை என்று சொல்லட்டும்,  டிஜிபி கைல இந்த ஸ்கிரீன்ஷாட் இருக்கு,  அதே ஸ்கின் ஷாட் என்  கையிலயும் இருக்கு.

இதை டிஜிபி நான் சொன்னது பொய்யின்னு சொல்லட்டும். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அண்ணாமலை அவர்கள்,  சொன்ன இந்த வாசகம்…  அவருடைய whatsapp மெசேஜ்ல   அக்டோபர் 21-ஆம் தேதி காலையில் அவர் மாற்றவில்லை என்று டிஜிபி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி சொல்லட்டும்,  அப்புறம் நான் ரிலீஸ் பண்றேன்.

அந்த ஸ்க்ரீன்ஷாட் மெசேஜ்யும் நான் ரிலீஸ் பண்றேன். அவங்க  கைது செய்வதற்கு கூடிய 8 மனிதர்கள் அவங்க பேரையும் ரிலீஸ் பண்ணுறேன். இவங்க இல்லை என்றால் 2019-இல் இன்ரோகேஷன் ரிப்போர்ட்ல ஜமேசா முபின் பெயர் எங்கு வந்துச்சு ? அதையும் பார்த்து நாங்க சொல்லுகின்றோம். ஆனால் காவல்துறை எங்களுக்கு எதற்கு இதை தள்ள வேண்டும் என்று புரியவில்லை என தெரிவித்தார்.  நேற்று காலை அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய நிலையில் மாலையே தமிழக அரசும் 5 பேர் மீது UAPA  பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |