புயலால் பாதிக்கப்படும் மீனவர்களை மீட்க 3 கோடி ருபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏராளமான மீனவர்களின் உயிர் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வாக்கி டாக்கி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் புயலால் கடலுக்குள் சிக்கி தவிக்கும் மீனவர்களை எளிதில் தொடர்பு கொண்டு அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு விரைவாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதனைதொடர்ந்து கோடியக்கரை பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கடலுக்குள் செல்லும் மீனவர்களை வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொள்வதற்காக கோடியக்கரை பகுதியில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கி இருந்த நிலையில் கஜா புயலால் அனைத்து உயர் கோபுரங்களும் சரி சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து மீண்டும் மூன்று கோடி ரூபாய் செலவில் அனைத்து கோபுரங்களும் மிக விரைவாக சீரமைக்கப்பட்டு எழுப்பப்பட்டு வருகின்றன தமிழக அரசின் புதிய திட்டம் அப்பகுதி மீனவர்கள் பாராட்டப்பட்டு வருகிறது விரைவில் தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கான இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.