Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசு சூப்பர் முடிவு எடுத்துருக்கு…! பாஜக ஆதரவு எப்போதும் உண்டு… அண்ணாமலை முக்கிய முடிவு!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்து ஜாதியினரும் அர்சகர்கள் ஆவதற்கு, முதலில் இருந்தே  பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு இருக்கிறது, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அது பற்றி எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி எதிரான கருத்தை சொல்லவில்லை. இதற்கு முன்னால் மாநில தலைவர் முருகர் இருந்தார்கள், இப்போது நான் இருக்கிறேன்.

நாங்கள் தொடர்ந்து ஒரே கருத்தை சொல்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் சில இடத்தில் ஆகம சாஸ்திரம் இருக்கிறது. குறிப்பாக சிதம்பரத்தில் தீட்சதர் எல்லாம், அது வந்து காலம் காலமாக நாம் கடைபிடித்து வருகிறோம். அதையும் நாம் கருத்தில் வைத்துக் கொண்டு போகணும், அதே நேரத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது எங்கேயும் எப்போதும் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கவில்லை.

நம்முடைய ஆதரவு மாநில அரசுக்கு தொடர்ந்து இந்த விஷயத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. எந்த ஆகம விதிகளிலுமே அதை நாமே  தான் உருவாக்கினோம், எந்த ஆகம விதிகளிலும் மனிதனை ஜாதி அடிப்படையில் பிரிக்கவில்லை, நீ உள்ளே வரக்கூடாது என்று யாரையும் பிரிக்கவில்லை. அப்படி பிரித்தால் அந்த ஆகம விதியே தவறு, அப்படி யாருக்கும் உரிமை கிடையாது. இன்றைக்கும் சில இடங்களில் பெண்கள்தான் அர்ச்சனை செய்கிறார்கள்,

அங்கே போய் ஆண்கள் அர்ச்சனை செய்ய வேண்டும் கோயம்புத்தூரில் ஈஷாவில் அங்கு இருக்கக்கூடிய தேவியினுடைய  ஆலயத்தில் பெண்கள் அர்ச்சனை செய்கிறார்கள், ஆண்களுக்கு அங்கு அனுமதி இல்லை. அது ஆண்கள் செய்யலாமா ? என்று கேட்டால் பண்ண கூடாது என்று தான் நான் சொல்வேன்.

சில குலதெய்வம் கோவிலில் தமிழ்நாட்டில் இன்னமும் நிறைய இடத்தில் நாம் சொல்லலாம். பெண்கள் அர்ச்சனை செய்கிறார்கள், சில குலதெய்வம் கோவிலில் நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம் ஜாதி என்பதே கிடையாது, நம்முடைய கட்டமைப்பு. அதில் சில குலதெய்வம் கோவிலில் இவர்கள்தான் செய்ய வேண்டும் என்கின்ற விதிமுறை இருக்கிறது. அவர்கள் சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் வருகிறார்கள். அது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இதை நாம் ரிட்சுவலாக செய்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |