நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தத்தை காரணம் காட்டி சம்பளம் வழங்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசே இது நியாம்தானா? மாத வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களுடைய குடும்பத்தை வறுமையில் தவிக்க விடுவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் தற்போது 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சம்பளத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் வங்கி மூலமாக சம்பளம் வழங்குவதில் பிரச்சனைகள் இருப்பின், அதுவரை நேரடியாக சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனவே இனியும் காலம் 26,000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.