வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்கான மீதி நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது.
சென்னையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சந்தீப் சக்சேனா ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது,’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வேளச்சேரியில் வளத்துறை தலைமையாக கட்டிடம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதனை கட்டுவதற்காக ரூபாய் 30 கோடி ஒதுக்கி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி கட்டிட கட்டுமான பணிக்காக ரூபாய் 20 கோடி நிதி கொடுக்கப்பட்டது. அதனோடு அந்த நிதி முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது.இந்நிலையில் தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கடிதங்களை எழுதி இருந்தார். அதில் இறுதிகட்ட பணிகளை செய்வதற்காக ரூபாய் 9 கோடியே 30 லட்சம் இன்னும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூபாய் ஒன்பது கோடி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.