100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்க ரூ.123 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 100 நாள் வேளைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்க ரூ. 123 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனால் மார்ச் மாதம் பணியாற்றிய சுமார் 26.84 ஆயிரம் பேருக்கு சிறப்பு ஊதியம் வழங்க உள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.64.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.64.27 கோடி ஒதுக்கீடு செய்து நேற்று மாலை தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னை மாநகராட்சி, ஊரக வளர்ச்சி, காவல்-தீயணைப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.