சென்னை உள்ள தனியார் மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவப் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் ஏற்கனவே 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தன்னை 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.