Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி!

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்றவர் வீர மரணம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த 40 வயதாகும் பழனிக்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.

பழனி இறந்த செய்த தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் பழனியின் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் எல்லையில் வீர‌மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர் மேஜர் அஜய் ரத்தோர் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் பழனியின் குடும்பத்தினருக்கு ஆளுநரின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Categories

Tech |