Categories
மாநில செய்திகள்

“இந்தியாவின் மருத்துவ தலைநகர் தமிழ்நாடுதான்” – முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் இந்தியாவின் மருத்துவ தலைநகர் தமிழ்நாடு என கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை கொடுத்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் பல்வேறு தலைவர்கள் நோய் தடுப்பு மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சியின் வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் கூறியதாவது, மருத்துவ துறையில் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலம் தமிழகம் தான். இதன் சிறப்பு என்னவென்றால் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.190 கோடியில் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது. மேலும் பல முதன்மையான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மருத்துவ துறையில் இணைந்து படிக்கும் மாணவர்களின் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு அவர் பெருமையுடன் கூறினார்.

Categories

Tech |