தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தி இயல்பு வாழ்க்கை வாழ தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு தளர்த்தப் பட்டு இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளப்படலாம். இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்படக்கூடிய மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் , அரியலூர், உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவிற்காக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு ஓரளவிற்கு தளர்த்தி அரசு அனுமதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.