Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : தமிழ்நாட்டு வீரர் வீரமரணம் ….!!

இந்திய எல்லையான லடாக் பகுதியில் நடந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதனை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கு சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்,  ராணுவ உயர் அதிகாரி உட்பட 3 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பழனி என்ற வீரரும் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் திருவாடானை தாலுகாவில் இருக்கும் உகல கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி கடந்த 22 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகன் இருப்பதாக உள்ளார்கள். நாளை எல்லையில் வீர மரணமடைந்த பழனியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Categories

Tech |