வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தனக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக நினைத்து 5 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டார்.
வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் கடந்த மார்ச் 14-ஆம் தேதி என்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரான மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ நோய் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து தனக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்து அமைச்சர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனோ பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்படவே அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்.