தமிழகத்தில் பீலா ராஜேஷ் உட்பட 6 அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 21 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 6 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி மாற்றப்பட்ட அதிகாரிகள்:
பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்ரம் கபூர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இடமாற்றம் பெற்றுள்ளார் .
மங்கத் ராம் சர்மா நீர் பாசன விவசாயிகள் நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
விபு நாயர் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயஸ்ரீ ரகுநந்தன் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துணை இயக்குனராக இடம் மாற்றப்பட்டுள்ளார்.