பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மோடி பெயரில் வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020 வழங்கப்பட்டது.
சென்னை ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, செரிபா, அஜிஸ், சுபைதா, அஸ்கர் அலி, டாக்டர் பிரகாஷ், எம் சுவாமி, தேசிய ஊடக வேளாளர் நலச் சங்க பொதுச் செயலாளர் ஜெய கிருஷ்ணன் ஆகிய ஐந்து பேருக்கு பிரதமர் மோடி பெயரில் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருநாகராஜன் துணைத் தலைவர் எம்.என். ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி திமுக என்றாலே போலி தான் எனவும் போலியான உறுப்பினர்களை திமுக சேர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தலைவர் பாத்திமா அலி உள்ளிட்டோர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.