தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக சார்பில் நடைபெறக் கூடிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில் குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் திமுக சார்பில் குடிநீர் பிரச்சனையை போக்க , முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல கூடிய வகையில் மாவட்டம் வாரியாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்து கொண்டு இருக்கிறது .
இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது , தற்பொழுது திமுக நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றும் மேலும் திமுக ஆட்சிக் காலத்தில்தான் குளங்கள் ஏரிகள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுந்ததாகவும் வந்ததாகவும் அதனால் தான் தற்பொழுது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் நன்றாக அறிந்து உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.