Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2021: பிளே ஆஃப் சுற்று போட்டிகள் …. நாளை முதல் தொடங்குகிறது ….!!!

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்தது .

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டி கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும் .இறுதியில் லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளது . இதில் ரூபி திருச்சி வாரியர்ஸ் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது .இதைத்தொடர்ந்து நடப்பு சாம்பியனான  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 புள்ளிகளை பெற்று 2-வது இடத்திலும் ,திண்டுக்கல் டிராகன்ஸ் 8 புள்ளிகளைப் பெற்று     3-வது இடத்திலும், லைகா கோவை கிங்ஸ் 7 புள்ளிகளை பெற்று 4-வது இடத்திலும் உள்ளது .

இந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து நாளை முதல் (10-ஆம் தேதி) பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள ‘ குவாலிபயர் 1’ ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதில் தோல்வி அடையும் அணி  ‘குவாலிபயர் 2 ‘ ஆட்டத்தில் மற்ற அணியுடன் மோதும். இதையடுத்து நாளை மறுதினம் (11-ம் தேதி ) நடைபெற உள்ள  எலிமினேஷன் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி ‘குவாலிபயர் 1’ சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். எனவே 13-ஆம் தேதி நடைபெறும் ‘குவாலிபயர் 2’ சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதியாக 5 சீசன் டிஎன்பிஎல் இறுதி போட்டி வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Categories

Tech |