Categories
மாநில செய்திகள்

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஷாக்… அரையாண்டு தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக பாடம் கற்பிப்பது போல் ஆன்லைன் கல்வி இல்லை என்று மாணவர்கள் குறை கூறுகின்றனர். மாணவர்களும் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து கொண்டார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டி இருந்தது.

ஆனால் இந்த தேர்வை ரத்து செய்ய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதேசமயம் பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார் என்று கூறியிருந்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளை பொறுத்தவரை அரையாண்டுதேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக்கொள்ளலா.ம் எந்தவித ஆட்சேபமும் இல்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. பள்ளிகல்வித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை. மாணவர்கள் நலன் கருதி 50 சதவீதம் பாடம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்விற்கு வினா எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |