Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் சோதனையில் சூப்பர்….! பொதுமுடக்கம் இருக்கணும்….! மருத்துவக்குழு பரிந்துரை …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே தளர்த்தக் கூடாது என்று மருத்து  குழுவினர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வருடன் மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்திலேயே அதிக சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையை குறைக்கக்கூடாது. குறைக்காமல் சோதனை செய்தால் தான் இந்த நோயின் தாக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று பயப்படக்கூடாது. கொரோனா அறிகுறி இருப்பவர்களை சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டும்.

மூன்று நாட்களுக்குள் அவர்களை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டுவந்தால் அவர்கள் குடும்பத்திற்கோ அல்லது வெளியிலோ நோயை பரப்ப மாட்டார்கள்.இந்தியாவிலே தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இந்த நோய் யாருக்கு வந்ததோ அவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்களோ அவர்களை கண்டுபிடித்து, நீங்கள் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்துள்ளீர்கள் வெளியே சொல்லக்கூடாது என்று  ஆலோசனை வழங்க வேண்டும்.

அவர்களுக்கு சோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அறிகுறி இல்லை என்றால் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்வதை குறைக்கக் கூடாது. தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். படிப்படியாக தளர்வு செய்ய வேண்டும். பொது முடக்கத்தை முழுவதுமாக நீக்க கூடாது என்று மருத்துவக்குழுவினர் முதல்வரிடம் வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Categories

Tech |