தமிழ்ப்புலிகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தமிழ்புலிகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து கரும்புலி குயிலி பேரவை மாவட்டச் செயலாளர் தட்சை மாடத்தி முன்னிலை வகித்து போராட்டத்தில் பேசினார்.
அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் எனவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் காளிதாஸ், வள்ளுவன், தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.