Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில்… “தமிழர்கள் புறக்கணிப்பு”… விளக்கம் கொடுத்த ரயில்வே நிர்வாகம்…!!

எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியமனம் நடைபெறுகிறது என ரயில்வே துறை விளக்கம் கொடுத்துள்ளது.

ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் பெரிதும் பரவி வரும் நிலையில் இது பற்றி தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், 2018-ம் ஆண்டு நடந்த ரயில்வே பணி நியமன தேர்வில் தேர்ச்சியடைந்த 541 பேருக்கு, திருச்சி பொன்மலை பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதில், 40 பேர் மட்டுமே தமிழர்கள் என தெரியவந்ததால், ரயில்வே துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்து வந்தது.

அத்துடன் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவழங்கக் கோரி காத்திருப்பு போராட்டமும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,பணி நியமன ஆணையம் மூலமே அனைத்து ஊழியர்களும் தேர்வு செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அத்துடன், 2018ஆம் ஆண்டு ரயில்வே துறையில் 3,218 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 51 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 17 சதவீதம் பேர் அதில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ரயில்வே கூறியுள்ளது. மற்றவர்கள் உரிய கல்வித் தகுதி பெற்றிருக்கவில்லை என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |