Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்கள் புரிஞ்சுக்கல…! பாஜக பின்னாடி போறாங்க… எச்சரிக்கையா இருக்கணும்…. நடுங்கி போயுள்ள திமுக …!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, குடும்பம் அரசியல் என சொல்கிறார்களே குடும்ப அரசியல் தான். குடும்பம் குடும்பமாக தொடர்ந்து ஒரே கட்சியில் இருக்கின்ற, ஒரு குடும்பம் உண்டு என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக குடும்பம் தான். எங்களை குடும்பக் கட்சி. குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள்.

இதுதான் அவர்களுடைய நிலைமை. பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மகளையே ஆட்சியிலே திராவிட முன்னேற்றக் கழகம்  தான் உட்கார வைத்தது என்று சொன்னால் இது வரலாற்றிலேயே எவ்வளவு பெரிய மாற்றம். பெருந்தலைவர் காமராஜர் திமுககாரனின் கட்டவிரலை வெட்டுவேன் என்றார்.

அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான். அதேபோல திமுகவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் இந்த இயக்கத்திலே பிற்காலத்தில் வந்து சேர்ந்தார்களே ஒழிய, நான் நிலையாக இருக்கிறோம். இன்று வரையிலும் அவர்கள் சொல்கின்ற அந்த மனுதர்மத்தில்  பெண்களுக்கு இடம் கிடையாது.

அதையெல்லாம் திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அத புரிஞ்சுக்காம இன்னைக்கு சில பேர் பாஜக பின்னாடி போகிறார் என்று சொன்னால் இந்த தருணத்தில் தான் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |