Categories
இந்திய சினிமா சினிமா

“தமிழர்களுக்கு பெருந்தன்மை அதிகம்”…. தெலுங்கில் ஏன் இல்லை…..? தியேட்டர் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் கேள்வி….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களுக்கு தெலுங்கில் அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற பிரச்சனை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பிரபல நடிகர் ராணாவின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ்பாபு தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு தெலுங்கில் அதிக தியேட்டர்கள் கொடுக்கப்பட மாட்டாது என்று சொல்லுவது கண்டிக்கத்தக்கது. சினிமா என்பது மொழிகளை கடந்தது. புஷ்பா, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆனபோது தமிழகத்தில் பெருந்தன்மையுடன் அதிக தியேட்டர்கள் கொடுத்தார்கள். எனவே அவர்களின் பெருந்தன்மையை பார்த்தாவது நீங்களும் அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கொடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகையின் போது அவதார் 2 ரிலீஸ் ஆனால் தியேட்டர் ஒதுக்க மாட்டோம் என்று சொல்லுவீர்களா? ‌ விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கொடுத்தால்தான் தமிழகத்திலும் தெலுங்கு படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும். எனவே இந்த பிரச்சனையில் ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |