Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாமிரபரணியில் குறைந்த வெள்ளம்… மக்கள் மகிழ்ச்சி… 8,387 கனஅடி நீர் திறப்பு..!!!

ஒரு வாரத்திற்குப் பிறகு மழை குறைந்துள்ள நிலையில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் வெள்ளம் குறைந்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வரை வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ளதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையிலிருந்து 1995 கன அடியும், பாபநாசம் அணையிலிருந்து 5740 கன அடியும், கடனா அணையிலிருந்து 512 கன அடியும், ராமநதியிலிருந்து 140 கன அடியுமாக மொத்தம் 8 ஆயிரத்து 387 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு குறைவால், தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி சென்ற வெள்ளம் சற்று குறைந்துள்ளது. நீரினால் ஆற்றின் இரு கரைகளை ஒட்டி அமைந்துள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கி இருந்தன. கடந்த 6 நாட்களாக வயல்களிலும் வீடுகளிலும் சூழ்ந்திருந்த வெள்ளம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

Categories

Tech |