கனடா நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் மாயமான நிலையில், அவர் குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
கனடாவில் வசித்து வந்த ஆறுமுகம் ரகுநாதன் என்ற 30 வயது தமிழர் மாயமானதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இவர், நேற்று மாலை 7:20 மணிக்கு Danforth Ave & Victoria Park Ave என்ற பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார். அதன் பின்பு அவரை காணவில்லை.
MISSING:
Arumugam Ragunathan, 30
– last seen on Nov. 23 at 7:20 p.m., in the Danforth Ave & Victoria Park Ave area
– described as 5'3", slim build, black curly hair
– last seen wearing a dark navy zip up sweater with hood, dark pants, grey shoes, blue cap#GO2262402
^al pic.twitter.com/J9PAVESae7— Toronto Police Operations (@TPSOperations) November 24, 2021
ஆறுமுகம், 5 அடி 3 அங்குலம் உயரமுடையவர் என்றும் அவரின் தலைமுடி, கருப்பு நிறத்தில் சுருளாக இருக்கும் என்றும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.