Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்கும் போது …. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தச்சு தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  .

மயிலாடுதுறை மாவட்டம்  அரையபுரம் கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில்  மல்லியம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்  எதிர்பாராதவிதமாக துரை மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |