சாலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்கா நாட்டில் ராக்கி மவுண்டைசேர்ந்த கைலக் மேப்ரி என்ற இளைஞர் அதிகாலையில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் .இதுகுறித்து அந்தப் பெண் வேதனையுடன் போலீசில் புகார் அளிக்கும் போது ‘நான் அதிகாலை 5.30 மணியளவில் சாலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மேப்ரி என்னை பின் தொடர்ந்து வந்து தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் ‘ என்று அவர் கூறினார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேப்ரியை கைது செய்தனர் .இதுகுறித்து போலீசார் கூறும்போது ‘பெண்ணைத் தாக்கி சீரழித்து கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மேப்ரி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறியுள்ளனர்.