Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம்….செல்போன் பறித்த வாலிபரை ….கைது செய்த போலீசார் …!!!

நசரத்பேட்டையில் செல்போன் பறித்த  வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 36 வயதான ஜனார்த்தனன் என்பவர், தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நசரத்பேட்டை அருகே செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்து வந்த நபர் அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர் நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருவேற்காட்டில் சேர்ந்த அஜித் குமார் என்ற புல்லட் அஜித் (வயது 27) என்ற  நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனம்  பறிமுதல் செய்தனர். அதோடு அவர் அன்றைய தினம் கால்டாக்சி  டிரைவர் ஒருவரிடமிருந்து, செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |