டேங்கர் லாரியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள புஞ்சை கொல்லி பகுதிக்கு மண்ணெண்ணை டேங்கர் லாரி ஒன்று கூடலூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டேங்கர் லாரி கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் சக்கரம் சாலையோர பள்ளத்தில் சிக்கிவிட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரியை மீட்டனர். அதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது.