அமெரிக்காவில் ஒரு சரக்கு ரயிலிலிருந்து காலியான ஒரு டேங்கர் மட்டும் கழன்று விழுந்த நிலையில், அது தானாக அதிக தூரத்திற்கு சென்றுள்ளது.
வாஷிங்டன் நகரிலிருந்து, கொலம்பியா மாகாணத்திற்கு சென்ற ஒரு சரக்கு ரயிலிலிருந்து, காலியான ஒரு டேங்கர் தனியாக கழன்றுவிட்டது. அதனை ஓட்டுநர் கவனிக்கவில்லை. அதன்பின், அந்த டேங்கர் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக ஓடிக்கொண்டிருந்துள்ளது.
கடைசியாக, ஒரு மேடான பக்கத்தில் நின்றிருக்கிறது. எனவே, காவல்துறையினர் ரயிலிலிருந்து எவ்வாறு டேங்கர் கழன்று விழுந்தது? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டிருக்கிறது.