Categories
உலக செய்திகள்

தான்சானியா மக்களுக்கு… நடந்த மற்றொரு சோகம் …இறுதி சடங்கில் பங்கேற்ற 45 பேர் பலி …!!!

தான்சானியா அதிபரின் இறுதி சடங்கில் பங்கேற்ற, பொதுமக்களில் 45 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

தான்சானியா நாட்டின் அதிபரான ஜான் மெகுபுலி கடந்த 2015ஆம் ஆண்டு  அதிபராக பொறுப்பேற்றார். இவருக்கு 10 வருடங்களாக இதயநோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் உடல்நிலை குறைவால், கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவு தான்சானியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த அதிபரின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ஹிக்ரு என்ற மைதானத்தில் இவரது உடல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி அஞ்சலி செலுத்த தான்சானியா நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் குவிய தொடங்கினர்.

இவரது உடலை காண முடியாத மக்கள் ,மைதானத்தில் உள்ள சுற்று சுவர் மீது ஏறியுள்ளனர். திடீரென்று அந்த சுவர் இடிந்து விழுந்ததால், அங்கிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் இடிந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கியயும் , கூட்ட நெரிசலில் சிக்கியும் சுமார் 45 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை தான்சானியா காவல் துறை தலைவரான லசாரோ மாம் பொசாசா உறுதிப்படுத்தியுள்ளார். இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ,அதிபரின் உடலை காணச் சென்ற பொதுமக்களில் 45 பேர் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டில் மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

Categories

Tech |