முக சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து தண்டலம் மருத்துவமனையில் இருந்து, சிறுமி தான்யா வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
கடந்த கடந்த 17ஆம் தேதி ஆவடி கீதாபுரம் ஸ்ரீவாநகரை சேர்ந்த சிறுமி தான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான நாசருக்கு உத்தரவிட்டதன் பேரில்,
அவர் துனிதமாக செயல்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ குழுவினர் உடனடியாக சிறுமியின் வீட்டிற்கு வந்து அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் சிறுமி தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 23ஆம் தேதி 10 பேர் அடங்கிய மருத்துவ குழுவினரால் அதிநவீன உயர் சிகிச்சையான முகச் சீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி தமிழக முதல்வர் குழந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தொடர்ந்து சாதாரண வார்டில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த தான்யா சிகிச்சை முடிந்து தொடர்ந்து கண்காணிப்புக்கு பிறகு 25 நாட்கள் கழித்து தற்போது அவர் இல்லத்திற்கு வந்து இருக்கிறார்.
அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மக்கள் மற்றும் உடன்படிக்கின்ற பள்ளி மாணவர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தள்ளனர். குழந்தை தன் பள்ளியில் தன்னை ஒதுக்கப்படுவதாகவும், மாணவர்கள் தன்னுடன் அமர மறுக்கின்றனர், பேச மறுக்கின்றனர், உணவு அருந்தமறுகின்றனர் என மன குமரலை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருடன் படித்த மாணவர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், ரோஜா மலர்களை வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். இதை கண்டு தானியா தற்போது மிகவும் மன சந்தோஷத்தில் இருக்கிறார். நண்பர்களுடன் பேசுவது, நண்பர்கள் தன்னை வரவேற்பது குறித்து தான்யா தற்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். தற்பொழுது அவரது இல்லத்தில் பெரும்பாலானோர் குவிந்து தானியாவை அன்புடன் வரவேற்று வருகின்றனர்.