மரவள்ளி குச்சி சிப்ஸ்
தேவையான பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கு – 2
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து சிறிது வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை மெல்லிய குச்சிகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, மரவள்ளிக் கிழங்கை போட்டு பொரித்து எடுத்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் குலுக்கினால் நல்ல மொறுமொறு மரவள்ளி குச்சி சிப்ஸ் தயார் !!!